தாமரையை ஒழிக்க வேண்டும் சீமான் திடீர் தாக்குதல்

''பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும், அந்த வேலையைத் தான் செய்யப்போகிறேன்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இது குறித்து சீமான் கூறியதாவது:

நாம் தமிழர் கட்சி வைத்திருந்தது கன்னா கிஸான் சின்னம். விவசாயி சின்னம் என்று பெயர் வைத்தவன் நான் தான். சின்னத்தை கோடு போட்டு நான் தான் சரி செய்தேன். அந்த சின்னத்தை கொண்டுபோய் மக்களிடத்தில் சேர்த்தது நாங்கள் தான்.

பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய கர்நாடகாவை சேர்ந்தவருக்கு, அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. அவர் சின்னத்திற்கு என்ன பெயர் வைக்க போகிறார் என்று தெரியவில்லை. அவர் சின்னம் கேட்கவில்லை என்கிறார்.

சின்னத்தை பெறுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டதால், சின்னத்திற்கு விண்ணப்பிக்க காலம் தாழ்த்திவிட்டோம். தேர்தல் அறிவிப்பு வெளியாகாத நிலையில், அவசர அவசரமாக சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? பா.ம.க., மாம்பழம் சின்னத்தை இழந்துவிட்டது. இருப்பினும், அந்த கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு வருகிறது.

ஆறு தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கிறேன். அங்கீகாரம் பெறுவதற்குள், சின்னத்தை பறித்து வீட்டில் இருந்து துாக்கி எறிந்துள்ளீர்கள்.

இது பா.ஜ., தலைமைக்கு தெரியாதா; கர்நாடகா, பா.ஜ., தலைவருக்கு தெரியாதா. முதலில் பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும், அந்த வேலையைத்தான் செய்யப்போகிறேன். தாமரை தேசிய மலர் என பாடப்புத்தகத்தில் உள்ளது. அதை ஏன் சின்னமாக கொடுத்துள்ளனர்.

என்னை போல, ஸ்டாலின், பழனிசாமி, அண்ணாமலையை தனியாக நிற்க சொல்லுங்கள் பார்க்கலாம். யாருக்கும் துணிவு இல்லை. தமிழிசை, நிர்மலா சீதாராமன் வேட்பாளர்களா என்பது எனக்கு தெரியாது என்று அண்ணாமலை சொல்கிறார்.

யாரோ ஒருவர் தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார். அவரது முதலாளி வேறு ஆள். அண்ணாமலை, மேனேஜர். தமிழகத்தின் மேஸ்திரி. நான் நீதிபதியின் நீதியை கேட்டு தான் சென்றேன். அவரிடம் ஜோஷியம் கேட்க செல்லவில்லை. இந்த அநீதியை இனி தேர்தல் கமிஷன் செய்யக்கூடாது.

இவ்வாறு சீமான் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்