காங்கிரசை கவனிங்க! ஸ்டாலின் 'அட்வைஸ்'
காங்கிரசுக்கான தொகுதி பங்கீட்டை சீக்கீரம் முடிக்குமாறு, தி.மு.க., குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடம், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், பிரதான பெரிய கட்சியாக, காங்கிரஸ் கட்சி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 9 தொகுதிகளில், காங்கிரஸ் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை, 15 தொகுதிகளில் துவங்கி, 12, 11 என, தி.மு.க.,விடம் கேட்டு, காங்கிரஸ் போராடி வருகிறது.
முதலில், 5 தொகுதிகளில் துவங்கி, தற்போது 7 வரை, அக்கட்சிக்கு கொடுக்க, தி.மு.க., முன்வந்துள்ளது. குறைந்தபட்சம், 9 தொகுதிகளை தந்தால் தான் உடன்பாடு என, காங்கிரஸ் உரத்த குரலில் பேசுவதால், உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், தொகுதி பங்கீட்டு பேச்சு நடத்தும் குழுவில் உள்ள மூத்த அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஸ்டாலின், 'காங்கிரசை விட்டு விட்டு தேர்தலில் பயணிக்க முடியாது. சீக்கிரம் அக்கட்சிக்கு தொகுதி பங்கீட்டை முடித்து கொடுங்கள்' என்றார்.'அதோடு வைகோவும் டென்சனாக இருக்கிறார். அவரையும் அமைதிப்படுத்தி, உடன்பாட்டில் கையெழுத்து வாங்குங்கள்' எனக் கூறியதாக தெரிகிறது.
வாசகர் கருத்து