தேர்தலை புறக்கணிக்காதீர்! :அண்ணாமலை 'அட்வைஸ்'
''தயவு செய்து ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தை புறக்கணிப்பு செய்யக் கூடாது,'' என, கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
திருப்பூர் அடுத்த மங்கலம் சுற்றுப்பகுதிகளில், 'வக்பு' போர்டு நில விவகாரம், பலரது சொத்துக்களை முடக்கியுள்ளது. அதனால், சொத்து பரிமாற்றங்கள் செய்ய முடியாமல் அப்பகுதியினர் தவித்து வருகின்றனர். விரக்தியடைந்த மக்கள், இந்த தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.
அங்கு நேற்று பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது:
நாம் ஓட்டு போட்டாலே இங்குள்ள கட்சிகள் மதிக்க மாட்டார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மரியாதை கொடுப்பர். ஓட்டுபோட மாட்டேன் என்றால் சுத்தமாக மதிக்கவே மாட்டார்கள். தயவு செய்து ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தை புறக்கணிப்பு செய்யக்கூடாது.
தேர்தல் களத்தை பாருங்கள்... நல்ல வேட்பாளர், நல்ல கட்சி வேட்பாளரை தேர்வு செய்து ஓட்டளியுங்கள். கோவை தொகுதியில் முதல் பட்டன் தாமரைதான். தி.மு.க., எவ்வளவு சித்து வேலை செய்தாலும், கோவையில் தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கொட்டினாலும், கோவை மக்கள் தாமரையின் பக்கம்தான் இருப்பர். இத்தேர்தலில், ஜனநாயகத்தை காக்க ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து