'சீட் தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்' - துரை வைகோ பேச்சு
ம.தி.மு.க., கட்சியினரிடம், லோக்சபா தேர்தல் நிதி பெறும் நிகழ்வு, கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் பிப்.,16 அன்று நடந்தது. நிதியை பெற்ற பின், அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ கூறியதாவது:
தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என, உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வை அ.தி.மு.க., எதிர்ப்பதை வரவேற்கிறோம்; அது தொடர வேண்டும். 'இண்டியா' கூட்டணி, வரும் லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். கூட்டணி கட்சியினரிடம் கடந்த முறை லோக்சபா, ராஜ்யசபா, 'சீட்' தலா ஒன்று கேட்டோம்.
இந்த முறை கூடுதலாக ஒரு லோக்சபா 'சீட்' கேட்டுள்ளோம். இந்த தேர்தலில், 'சீட்' கொடுக்கிறார்களோ, இல்லையோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து