ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
திருப்பூர் : திருப்பூர் லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மைய ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள் வீதம், மொத்தம் 84 டேபிளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தபால் ஓட்டுக்கள், ஏழு டேபிள்களில் எண்ணப்படுகிறது.
லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பணிகளுக்காக, 102 ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 102 ஓட்டு எண்ணிக்கை உதவி அலுவலர், 120 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் முன்னிலை வகித்தனர். ஓட்டு எண்ணிக்கை பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை, கல்வித்துறை, வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜூலை 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கப்படும். தொடர்ந்து, ஸ்ட்ராங் ரூம் திறந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதிக்கான அரங்குகளில் வைத்து, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டுச்சாவடி முகவர்கள் முன்னிலையில், கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள எண்ணை சரிபார்த்து உறுதி செய்யவேண்டும்.
மெஷினை உயர்த்தி தெளிவாக காண்பிக்கவேண்டும் என்பது உட்பட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வாசகர் கருத்து