Advertisement

7 லட்சம் ஓட்டு முன்னிலையுடன் அமித்ஷா வெற்றிமுகம்


காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றிப்பெறும் தருவாயில் இருக்கிறார்.


லோக்சபா தேர்தலின் ஓட்டுகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் விஐபி வேட்பாளராக கருதப்படும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். இவர்களின் வெற்றி ஏறக்குறைய உறுதியானாலும், ஓட்டு வித்தியாசம் யாருக்கு அதிகம் கிடைக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அந்த வகையில் மாலை 3:45 மணி நிலவரப்படி இந்தியாவிலேயே அதிகபட்சமாக அமித்ஷா மட்டுமே 7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காந்திநகர் தொகுதியில் அவர் 9.80 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் சோனல் ராமன்பாய் படேல் 2.55 லட்சம் ஓட்டுகளையே பெற்றார். இதன்மூலம் 7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் இருக்கும் அமித்ஷா வெற்றிக்கனியை பறிக்க உள்ளார். இவர் கடந்த 2019 லோக்சபா தொகுதியில் இதே தொகுதியில் 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.


Thirumal Kumaresan - singapore, சிங்கப்பூர்
04-ஜூன்-2024 16:52 Report Abuse
Thirumal Kumaresan அவருக்கென்ன ராஜாதான்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்