Advertisement

கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாள் மேற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

ஓசூர் : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 101வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திலுள்ள மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, கிளை பகுதிகளில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும், கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அந்தந்த மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தந்த பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்