Advertisement

மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி ! உ.பி., மேற்குவங்கம் பா.ஜ., காலை வாரியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 18 வது லோக்சபா தேர்தலில் இன்று காலை முதல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காலையில் துவக்கத்தில் பா.ஜ., 300ம் தாண்டி முன்னிலை சென்று கொண்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் பா.ஜ., தலைமையிலான கூட்டணியே (தற்போது 295) மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. பா.ஜ., கட்சி அதிகம் எதிர்பார்த்த உ.பி., மேற்குவங்கம் பா.ஜ., வின் காலை வாரியது. மஹாராஷ்ட்டிரா , ராஜஸ்தான் மக்களும் தீர்ப்பை மாற்றி அளித்தனர்.



கடந்த இரண்டரை மாதங்களாக நடந்து முடிந்த 18 வது லோக்சபா ஏழு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதல் பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியே அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 3வது முறை ( ஹாட்ரிக் ) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றுள்ளார். இந்தியாவில் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பின்னர் தொடர்ந்து 3 வது முறை வெற்றி பெற்ற பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். கடந்த 77 ஆண்டுகால வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகின்றன.


10 ஆண்டில் பல திட்டங்கள்






ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை, அனைவருக்கும் வங்கிகணக்கு, ஆதார் நடைமுறை வெற்றி, அயோத்தியில் ராமர் கோயில், கறுப்புப்பணம் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், பழைய சட்டங்களை ஒழித்தல், காஷ்மீரில் மோடி எடுத்த சில முக்கிய முடிவுகள், ஏழை, விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவிதொகை, இலவச காஸ், பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, மருத்துவகாப்பீடு, பெண்களுக்கு அதிகாரம், ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், கோவிட் காலத்தில் தடுப்பு முறைகள் சிறப்பான கையாள்தல், இந்நேரத்தில் மக்கள் தேவைகளுக்கேற்ப உதவியது, பிரதமர் மோடியின் சிறப்பான திட்டமிட்ட பிரசாரம், இப்படி பல்வேறு விஷயங்கள் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு கைகொடுத்துள்ளது.

எதிர்கட்சிகள் பிரசாரம் !



காங்., தலைமையிலான இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றன. பல தலைவர்கள் ஒன்று கூடி பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள், கடும் விமர்சனம் வைத்தனர். இதனால் பா.ஜ., ஓட்டுக்கள் சற்று சரிந்துள்ளது. கடந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய காங் கூட்டணி தற்போது 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்