Advertisement

சர்வேயை வைத்து மிரட்டும் தி.மு.க., கொந்தளிக்கும் தமிழக காங்கிரஸ்

தேர்தல் கூட்டணி வரலாற்றில், ஒரு கட்சியின் வேட்பாளர்கள் நியமனத்தில் மற்றொரு கட்சி மூக்கை நுழைக்கும் புது 'டிரெண்ட்' ஆக தமிழக காங்.,கில் தி.மு.க., ஆதிக்கம் செலுத்தி வருவது, காங்கிரசுக்குள் புயலைக் கிளப்பியுள்ளது.

தி.மு.க., - காங்., இடையே லோக்சபா தேர்தல் கூட்டணியில், 9+1 என்று தொகுதிகள் எண்ணிக்கை முடிவானது. தற்போது காங்., முன்வைக்கும் திருவள்ளூர், திருச்சி, ஆரணி, கரூர் உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளை கேட்டு பெறுவதில் தி.மு.க.,வுடன் மீண்டும் இழுபறி நீடித்து வருகிறது.

இச்சிக்கலுக்கு பிரதான காரணம், 'காங்., தலைமை முடிவு செய்துள்ள சில வேட்பாளர்கள் வரும் தேர்தலில் தோல்வியை தழுவுவர். அவர்களை மாற்றுங்கள் அல்லது நாங்கள் தரும் மாற்றுத் தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள்' என தி.மு.க., அறிவுரை கூறுவதுதான்.

தி.மு.க.,வின் இந்த தலையீடு, தமிழக காங்.,குக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் தி.மு.க.,வின் இந்த முடிவுக்கு, காங்., மேலிடப் பொறுப்பாளர்கள் சம்மதிக்கும் மனநிலையில் உள்ளதாக வெளியாகும் தகவலால், தமிழக காங்., மூத்த தலைவர்கள் கடும் 'அப்செட்'டில் உள்ளனர்.

'கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் தங்களை நம்பி வரும் கட்சிக்கு எத்தனை, எந்தெந்த தொகுதிகள் என ஒதுக்க வேண்டியது கடமை. ஆனால், வேட்பாளர்களையும் அவர்களே பரிந்துரைத்து நெருக்கடி கொடுத்தால், அதில் கூட்டணி தர்மம் எங்கே இருக்கும். தமிழகத்தில் ஒரு மாநில கட்சிக்கு ஒரு தேசிய கட்சி இப்படியா கீழே விழுந்து கிடக்க வேண்டும்' என காங்., நிர்வாகிகள் மனம் நொந்து போய் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து காங்., சிட்டிங் எம்.பி., ஒருவர் கூறியதாவது:

தி.மு.க., எடுத்துள்ள சர்வே அடிப்படையில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மாற்றுங்கள் என சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தலில் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முடிவில் தான் மக்கள் ஓட்டளிப்பர். அந்த வகையில் காங்.,குக்கு மக்கள் அளிக்கும் ஓட்டுகள் ராகுலுக்கு உரியவை அல்லது மோடிக்கு எதிரானவை.

கூட்டணி தர்மத்திற்கு குண்டு வைப்பது போன்ற எதிரான செயல்களில் தி.மு.க., ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்