மத்திய அரசு திட்டங்கள் பயனாளிகளிடம் 'சர்வே'
தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற வேண்டும் என இந்த தேர்தலில் முனைப்பு காட்டி வருகிறது. அதனால் பிரசார உத்திகளில் ஒன்றாக, மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த நபர்களிடம் சர்வே நடத்தி வருகின்றனர் அக்கட்சியினர்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா - சிறு தொழில் துவங்கும் நபர்களுக்கான கடன் திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா - வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காஸ் இணைப்பு திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - மலிவு விலையில் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி கிஸான் சம்மான் - விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நேரடியாக பயன் பெற்ற பயனாளிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
பா.ஜ., அலுவலகத்தில் இருந்து, பயனாளிகளின் விபரங்களை சேகரித்து, அவர்களிடம் பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி பற்றியும், அடுத்த பிரதமராக யாரைத் தேர்வு செய்வர் என்பது குறித்த கருத்துக் கணிப்பும் நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து