Advertisement

பா.ஜ., ஐந்தாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை, பா.ஜ., தலைமை நேற்றிரவு வெளியிட்டது.

லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை நான்கு கட்டங்களாக அக்கட்சி ஏற்கனவே வெளியிட்டது. அந்த வரிசையில், 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியல் நேற்று வெளியானது.

பாட்னாவில் ரவிசங்கர்



இதில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பீஹாரின் உஜியார்பூர் தொகுதியிலும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பேகுசராய் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஹிமாச்சலின் மண்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.காங்.,கில் இருந்து விலகி பா.ஜ.,வில் நேற்று மாலை இணைந்த முன்னாள் எம்.பி.,யும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு, ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் மருமகள் சீதா சோரனுக்கு அம்மாநிலத்தின் தும்கா தொகுதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் பெலகாவியில் போட்டியிடுகிறார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியும், மத்திய கால்நடைத்துறை இணைஅமைச்சர் பிரதாப் சாரங்கிக்கு பாலாசோர் தொகுதி யும், பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு புரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், அஸ்வினி குமார் சவுபே ஆகியோருக்கு இந்த முறை சீட் வழங்கப்பட வில்லை. உ.பி.,யின் பிலிபித் தொகுதி எம்.பி.,யான வருணுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக, யோகி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஜிதின் பிரசாத் அங்கு போட்டியிடுகிறார்.

சுல்தான்பூரில் மேனகா



பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா, உ.பி.,யின் சுல்தான்பூர் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார். கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை எதிர்த்து, அந்த மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார்.

ராமாயணம் தொலைக்காட்சி தொடரில், ராமராக நடித்து புகழ் பெற்ற நடிகர் அருண் கோவில், உ.பி.,யின் மீரட் தொகுதியில் களம் காண்கிறார். சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த மேற்கு வங்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், அம்மாநிலத்தின் தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்