வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை; காந்தி நகரில் அமித்ஷா முன்னிலை
வாரணாசி: வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ., சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் மோடி மீண்டும் முன்னிலையில் உள்ளார்.
துவக்கத்தில் சில சுற்றுகளில் பின் தங்கிய பிரதமர் மோடி, தற்போது 85, 152 ஓட்டுகள் பெற்றுள்ளார். தற்போது அவர், 21,629 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரசின் அஜய்ராய், 63,523 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
அமித்ஷா
அதேபோல் குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், 2,09,736 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவர் 1,67,094 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
வாசகர் கருத்து