கோவைக்கு ஐ.ஐ.எம் உள்பட 100 வாக்குறுதிகள்: தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கை
கோவை லோக்சபா தொகுதிக்கு 100 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். "இவை 500 நாள்களில் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. கோவையில் பா.ஜ., சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
இந்நிலையில். கோவை லோக்சபா தொகுதிக்கான 'என் கனவு நமது கோவை' என்னும் பெயரில் 100 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:
கோவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.பி., அலுவலகம் திறக்கப்பட்டு 6 சட்டமன்ற அலுவலகம் மக்கள் குறைதீர் மன்றமாக செயல்படும்.
கோவை விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
கோவை மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
கோவையில் ஐ.ஐ.எம்., நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஆனைமலை-நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்,
கவுசிகா நதியை மீட்டெடுத்து நீர்வளத்தை உயர்த்த நடடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் என்.ஐ.ஏ.,வின் கிளை அலுவலகம் திறக்கப்படும்.
கோவையில் செமிகண்டக்டர் தயாரிக்க வலியுறுத்தப்படும்.
கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் கொண்டு வரப்படும்.
நாடு முழுதும் உள்ள புராதனமான ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
காமராஜரின் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவையில் 3 உணவகங்கள் அமைக்கப்படும்.
கோவை - கன்னியாகுமரி, கோவை - திருவனந்தபுரம் பகுதிகளுக்கு புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
கோவை - திருச்சி சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.
கோவை - கரூர் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருச்சி - அவிநாசி சாலை இடையே புதிய பேருந்து முனையம் கொண்டு வரப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை.
குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.
கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்கப்படும்.
அதிநவீன கேன்சர் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும்.
கோவையில் 'கேலோ இந்தியா' திட்டம் வாயிலாக சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ் கோவையின் பழமையான கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.
சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்காக இளைஞர் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
2026 சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள்:
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும்.டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.போலீசாரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்; வாரத்திற்கு ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்கப்படும். இந்து சமயஅறநிலையத்துறையின் கோயில்கள் மீதான அதிகாரம் மக்களிடம் வழங்கப்படும்.
வாசகர் கருத்து