60க்கு 46: அருணாச்சல்லில் பா.ஜ., அமோகம்: சிக்கிமில் மீண்டும் தமாங் முதல்வராகிறார்
புதுடில்லி: அருணாச்சல்லில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது. 50 தொகுதிகளில் 37 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே, 10 தொகுதிகளில் பா.ஜ., போட்டியின்றி வெற்றி பெற்றது. மொத்தம் 60க்கு 46 தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. சிக்கிமில் 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) கட்சி கைப்பற்றி, அபார வெற்றி பெற்றது. தமாங் மீண்டும் முதல்வராகிறார்.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்ட சபைகளின் ஓட்டு எண்ணிக்கை இன்று(ஜூன் 02)நடந்தது. . முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அருணாச்சலில் பா.ஜ.,, காங்கிரஸ், என்.பி.பி., மற்றும் சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) , எல்.டி.எப்., பா.ஜ., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முடிவுகளை எதிர்பார்த்து காத்து இருந்தன.
மீண்டும் முதல்வராகின்றனர்
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள். இதில் ஆளும் பா.ஜ., போட்டியின்றி 10 தொகுதிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றது. எஞ்சிய 50 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 36 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.
60க்கு 46
இதுவரை மொத்தம் 60க்கு 46 தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக இருக்கும் பெமாகாண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் , மற்றவர்கள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
சிக்கிமில் ஆட்சி கட்டில் யாருக்கு?
சிக்கிமில் 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இங்கு பிரேம்சிங் தமாங் மீண்டும் முதல்வராகிறார். எஸ்.டி.எப்., - 1 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பிரதமர் மகிழ்ச்சி
அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி தொடர்பாக பிரதர் மோடி வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் வீரியத்துடன் பாடுபடும் எனக்கூறியுள்ளார்.
வாசகர் கருத்து