கனிமொழிக்கு நிழல் மக்களுக்கு வெயில்
துாத்துக்குடி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, திருச்செந்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.
புன்னக்காயலில் இருந்து பிரசாரத்தை துவங்கிய அவர், தொடர்ந்து, மணப்பாடு, அமலி நகர் ஆகிய மீனவ கிராமங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
அமலி நகரில் கனிமொழி பிரசாரம் செய்தபோது, அவரது பேச்சை கேட்க ஏராளமான பெண்கள் அங்குள்ள ஒரு மரத்தின் கீழே கூடியிருந்தனர். காலை, 11.30 மணியளவில் கனிமொழி அமலி நகர் கிராமத்துக்குள் நுழைந்தபோது வெயில் வாட்டியது.
உடனே, அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கனிமொழியின் வாகனத்தை மரத்தின் நிழலுக்கு கொண்டு சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த பெண்களை, வேறு பகுதிக்கு செல்லுமாறு விரட்டினர்.
பின்னர், கனிமொழி மர நிழலில் நின்று ஓட்டு சேகரித்தார். வயதானோர், பெண்கள், குழந்தைகள் வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சிலர் துணிகளால் தலையை மூடிக்கொண்டு நின்றனர்.
வாசகர் கருத்து