அக்கறை காட்டாத வெளியூர் எம்.பி.,க்கள் நாகை தொகுதி।யின் சாபம்
திருவாரூர் மாவட்டத்தையும் உள்ளடக்கிய நாகை லோக்சபாவுக்கு, இதுவரை 17 முறை பிரதான கட்சிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களும், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த 1957ல் இருந்து இந்திய கம்யூ., - 7; காங்., - 4; தி.மு.க., - 4; அ.தி.மு.க., - 2 முறை தொகுதியைக் கைப்பற்றின.
இதுவரை எம்.பி.,யாக இருந்தவர்கள் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாவட்ட வளர்ச்சியில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர, நாகை மாவட்ட வளர்ச்சியில் அக்கறை காட்டாததால், மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரை நாகை பெற்றுள்ளது.
இம்முறையேனும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை பிரதான கட்சிகள் வேட்பாளர்களாக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாகை மாவட்ட மக்கள் இருந்தனர். இந்திய கம்யூ.,வேட்பாளர் வை.செல்வராஜ் அ.தி.மு.க., வேட்பாளர் சுர்சித் சங்கர், பா.ஜ., வேட்பாளர் ரமேஷ், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா ஆகியோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், நாகை மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து