ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார் மன்மோகன் சிங்
ராஜ்யசபா எம்.பி.,யாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெற்றார்.
1991ம் ஆண்டு காங்கிரசின் நரசிம்மராவ் ஆட்சியில் அசாம் மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பி.,யாக மன்மோகன் சிங் பதவியேற்றார். பின், அவரின் ஆட்சியில் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார்.
1991 முதல் 2019 வரை அசாம் மாநிலத்தில் இருந்தும் 2019 முதல் மார்ச் 2024 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்றுடன் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிந்தது. 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.
மன்மோகனின் ஓய்வை அடுத்து, ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட உள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மன்மோகன் சிங் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று சென்றாலும், தேசத்தில் உள்ள மக்களுக்கான வழிக்காட்டியாக திகழ்வார். மன்மோகனின் ஓய்வுடன் ஒரு சகாப்தம் முடிகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்கள் பதவிக் காலம் முழுதும் பணிவு. ஆளுமைத்திறன் உட்பட அனைவராலும் ஈர்க்கப்பட்டோம். நாட்டுக்கான பங்களிப்பில் மன்மோகனின் பங்கு இன்றியமையாதது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து