சிறையில் இருந்து தேர்தல் வியூகம்: செந்தில் பாலாஜி செயலாற்றல் அடேங்கப்பா!

கோவையில், 10 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., மீண்டும் போட்டியிடுவதால், வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டது. விருப்ப மனு கொடுத்த, 21 பேரிடமும், ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வந்த, டாக்டர் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமியின் மருமகன் டாக்டர் கோகுல், ரஜினியின் மருமகன் விசாகன், பகுதி கழக செயலர் கார்த்திக் செல்வராஜ் மகள் கிருபா உள்ளிட்டோரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டது.

இதில், டாக்டர்கள் மகேந்திரன் அல்லது கோகுல் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியினரே எதிர்பார்க்காத வகையில், முன்னாள் மேயர் ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

மகேந்திரனிடம் பண வசதி இருக்கிறது; கட்சியினரிடம் நெருக்கம் இல்லை. செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஜாதி ரீதியான ஓட்டுகள் நழுவ வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பைனலில் கோகுல் பெயர் இருந்தது.

பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, கோவையில் தி.மு.க., போட்டியிடுவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை; கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என கூறி வந்தார். தி.மு.க., போட்டியிடுவது என தலைமை உறுதியாக முடிவெடுத்ததும், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்து கேட்டறியப்பட்டது.

அவரது தரப்பில், தன்னுடைய ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்தினால், கரூரில் இருந்து ஆட்களை இறக்கி, ஜெயித்துக் காட்டுகிறேன் என, உறுதி அளித்திருக்கிறார். அவர் மீதுள்ள நம்பிக்கை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியால், கவுண்டர் இனத்தைச் சேர்ந்த, முன்னாள் மேயர் ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர், அ.தி.மு.க.,வில் இருந்து, செந்தில்பாலாஜி உதவியுடன், தி.மு.க.,வில் ஐக்கியமானார். உடனே, மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. செந்தில்பாலாஜி சிறைக்குச் செல்லும் முன்பு வரை, கட்சி கூட்டங்களில் ராஜ்குமார் தென்பட்டார். அதன்பின், பெரும்பாலான இடங்களுக்கு வருவதை தவிர்த்தார்; எதிர்முகாமில் இருந்து வந்தவர் என்பதால், கட்சி கூட்டத்துக்கு அழைப்பதை நிர்வாகிகள் தவிர்த்தனர்.

ஆட்கள் வந்தாச்சு



கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டதால், தி.மு.க., கூடாரம் கோவைக்கு இடம் பெயர்ந்து விடும். உள்ளாட்சி தேர்தலில் முகாமிட்டது போல், கரூரில் இருந்து ஆட்கள் வர ஆரம்பித்து விட்டனர். மூலனுாரை அடையாளமாக கொண்டவர் தலைமையில் கட்சியினர் வந்திறங்கி விட்டனர். 'பூத் கமிட்டி' அமைக்கப்பட்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை அங்குலம் அங்குலமாக அலசி, 'ஸ்கெட்ச் ஒர்க்' செய்து விட்டோம். களம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்