பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தது

சென்னை :தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு, 411 பெண் வேட்பாளர்கள், களம் இறங்கினர். ஆனால், நான்கு சட்டசபை தேர்தல்களை விட, குறைவான பெண் எம்.எல்.ஏ.,க்களே, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், ஒவ்வொரு முறையும், பெண்கள் போட்டியிடுவது அதிகரித்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தலில், அதிகபட்சமாக, 2016ல், 320 பெண்கள் களம் இறங்கினர்.அந்த சாதனையை முறியடித்து, இந்த தேர்தலில், 411 பெண்கள் போட்டியிட்டனர். இதற்கு முக்கியக் காரணம், நாம் தமிழர் கட்சி. பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள் என்பதை உணர்த்த, 117 சட்டசபை தொகுதிகளில், பெண்களை களம் இறக்கியது.


இதுவரை நடந்த தேர்தல்களில், அதிகபட்சமாக, 1991 பொதுத் தேர்தலில், 32 பெண்கள் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாகினர். இம்முறை, 411 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால், 12 பேர் மட்டுமே, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஆறு பேர், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., சார்பில் மூவர், பா.ஜ., சார்பில் இருவர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)