30 - 50 வயது பிரிவினர் மீது கட்சியினர் 'பாச மழை'
பெருவாரியாக உள்ள 30 முதல் 50 வயது வரையிலான வாக்காளர்கள் மீது அரசியல் கட்சியினர் 'பாசமழை' பொழிந்து வருகின்றனர்.
தமிழகத்தின், 38 மாவட்டங்களில், ஜன., 31 நிலவரப்படி ஆறு கோடியே, 18 லட்சத்து, 90 ஆயிரத்து, 348 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 30 - 39 வயது பிரிவினர் 1.28 கோடி பேரும், 40 - 49 வயது பிரிவை சேர்ந்த ஒரு கோடியே, 37 லட்சத்து, 66 ஆயிரத்து, 566 பேரும் உள்ளனர். அதனால் இந்த தரப்பினர் மீது அரசியல் கட்சியினர் 'பாசமழை' பொழிகின்றனர்.
பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சியினர் கூறுகையில், 'முதல் முறை ஓட்டளிக்கும் 18 - 19 வயதுடையோர் எண்ணம் எப்படி வேண்டுமானாலும் மாறும். 20 - 29 வயது பிரிவினர் ஒன்று அல்லது இரண்டு முறை ஓட்டளித்து இருப்பர். ஏற்கனவே ஓட்டளித்த கட்சிக்கு மாற்றாகவோ அல்லது அதே கட்சிக்கோ மீண்டும் ஓட்டளிப்பர்.
எனவே இவர்களை நம்ப முடியாது. நாங்கள் அதிகமும் நம்புவது, 30 முதல், 50 வயது உள்ளோரை தான். இவர்களைத் தேடிப்பிடித்து ஓட்டு சேகரித்து வருகிறோம். இவ்வயது பிரிவினர் நிச்சயம் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவராக இருப்பர் என்பதால், எளிதில் கணித்து விடவும் முடிகிறது' என்றனர்.
வாசகர் கருத்து