கமலுக்கு ஸ்டாலின் 'அசைன்மென்ட்'
சேலத்தில் முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் சந்தித்து பேசினார். இருவரும் பேசியது குறித்து, மய்யம் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பிரசாரத்திற்கு மக்களிடம் உள்ள வரவேற்பு குறித்து இருவரும் பேசினர்.
கடந்த 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி நடந்தது. ஆட்சியை விட்டு போகும்போது, அரசுக்கு 52,000 கோடி ரூபாய் கடன் தான் இருந்தது.
அதன் பின், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி மற்றும் பழனிசாமி ஆட்சி முடியும்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., விட்டுச் சென்ற கடனுக்கு வட்டி மட்டும், 40,000 கோடி ரூபாய் வீதம், கடந்த மூன்று ஆண்டுகளில், 1 லட்சத்து, 20,000 கோடி ரூபாய் கட்டப்பட்டுள்ளது.
மக்களுக்கான அரசு, மக்களுக்காக செலவு செய்தாக வேண்டும். லாபம், நஷ்டம் பார்க்க வேண்டிய அளவிற்கு நாம் கம்பெனி நடத்தவில்லை. மக்களின் தேவையை நிறைவேற்றி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இதையெல்லாம் மக்களிடம் புள்ளிவிபரமாக எடுத்து சொல்லுமாறு, கமலிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து