Advertisement

திண்டுக்கல் எம்.பி.,யை புறக்கணிக்கும் தி.மு.க.,வினர்

திண்டுக்கல் லோக்சபா தொகுதியில், 2019 தேர்தலில் தமிழகத்திலே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தி.மு.க., - எம்.பி., வேலுசாமி. இந்த முறை அத்தொகுதியை கூட்டணி கட்சியான மா.கம்யூ.,வுக்கு தி.மு.க., ஒதுக்கியது.

இதனால் அப்செட் ஆன வேலுசாமி, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. யோகா, தியானம் என மனதை திடப்படுத்தி வருகிறார். எப்போதும், 2 அமைச்சர்களுடன் இருக்கும் அவரை தற்போது எங்கும் காண முடிவதில்லை.

தி.மு.க., முக்கிய புள்ளிகளும் அவரை புறக்கணித்து வருகின்றனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் கூட அவரது பெயர் இடம்பெறுவதில்லை. கட்சியினரும் அவரை அழைப்பதில்லை.

அ.தி.மு.க., கூட்டணியில் கூட முன்னாள் எம்.பி., உதயகுமார் அக்கட்சியினருடன் பிரசாரத்திற்கு செல்லும் நிலையில், தி.மு.க.,வில் சிட்டிங் எம்.பி.,யை புறக்கணிப்பது அத்தொகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்