பிரதமர் யார் எனத் தெரிந்தே ஓட்டளிக்கும் தேர்தல் : அண்ணாமலை
'வேல் யாத்திரை 4 எம்.எல்.ஏ.,க்களை கொடுத்தது; எண் மண் என் மக்கள் யாத்திரை 40 எம்.பி., தொகுதிகளை பெற்றுத் தரும்' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா, இன்று (பிப்.27) பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தெரிந்தே மக்கள் ஓட்டளிக்கும் லோக்சபா தேர்தலாக இது இருக்கிறது. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வருகை தர வேண்டும். வேல் யாத்திரையின் மூலம் 4 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். 'என் மண் என் மக்கள்' யாத்திரை 40 எம்.பி.க்களை கொடுக்கும்' என்றார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், 'அண்ணாமலை கடந்த ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையை துவக்கினார். இந்த யாத்திரை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 234 தொகுதிகளிலும் சென்றுவிட்டு, இன்று பல்லடத்தில் நிறைவு பெறுகிறது' என்றார்.
வாசகர் கருத்து