'காவிரி நீர் கொடுங்கள்' அருண் நேரு விரட்டியடிப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதிக்குட்பட்ட கொசூர் பஞ்சாயத்தில், 7,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், முறையாக குடிநீர் கிடைக்காமல், பல கி.மீ., துாரம் மக்கள் சென்று நீர் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் நேருவின் மகனும் பெரம்பலுார் தொகுதி வேட்பாளருமான அருண் நேரு, நேற்று கொசூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கம்பளியாம்பட்டியில் ஓட்டு கேட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையோரம் நின்றிருந்த பெண்கள், அவரை வழிமறித்து 'எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை. தினமும், பெட்ரோல் போட்டு டூ-வீலரில் சென்று தான் தண்ணீர் பிடித்து வருகிறோம்.
அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கின்றனர்; தண்ணீர் மட்டும் கொடுக்கவில்லை. ஓட்டு கேட்டு வருகிறீர்கள். எங்களுக்கு முதலில் காவிரி தண்ணீரை கொடுங்கள் ஓட்டு போடுகிறோம்' என்றனர்.
வேட்பாளர் வாகனத்தை நிறுத்தி, 'நீங்கள் ஓட்டு போடுங்கள்; கண்டிப்பாக குடி தண்ணீர் தினமும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்' என, கூறிவிட்டு கடந்து சென்றார்.
வாசகர் கருத்து