Advertisement

செலவு செய்ய தயங்கும் அருண் நேருவின் மாமா

நேருவின் மகன் அருண் நேருவின் பிரசார செலவுகளை செய்ய, அவரது உறவினரே தயங்குவதால், தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து பெரம்பலுார் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

பெரம்பலுாரில் தி.மு.க., வேட்பாளராக மூத்தஅமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, ம.நீ.ம., தலைவர் நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரம்பலுாரில் பிரசாரத்தில்ஈடுபட்டனர்.

இந்த கூட்டங்களுக்கு கிராமத்தினரை அழைத்து வரும்படி, கிளை செயலர்களுக்கு நேருவின் தங்கை கணவரும், பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் கிழக்கு ஒன்றிய செயலருமான கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். தலைக்கு 200 ரூபாய் தருவதாகவும் அவர் கூறினார்.

அதனால், கிளை செயலர்கள் ஒவ்வொருவரும், 30 முதல் 50 பேர் வரை அழைத்து வந்தனர். கூட்டம் முடிந்தபின், சிறிய கிளைகளில் 20 பேருக்கும், பெரிய கிளைகளில் 30 பேருக்கும் மட்டுமே தலா 200 ரூபாய் கொடுத்துள்ளார். வேறு வழியின்றி மற்றவர்களுக்கு கிளை செயலர்களே தங்கள் கைகளில் இருந்து கொடுத்தனர்.

மேலும் ஒரு கிளைக்கு ஐந்து பேருக்கு மட்டுமே தி.மு.க., சின்னம் மற்றும் வேட்பாளர் படம் போட்ட தொப்பி, டி-ஷர்ட் கொடுத்துள்ளார். தனது மச்சினன் மகனுக்கே இவர் செலவு செய்யத் தயங்கினால் மற்ற நிர்வாகிகள் எப்படி செலவு செய்வர்?

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்