எம்.எல்.ஏ.,க்கள் தலையில் செலவு; அதிர்ச்சியில் ஒருவர் 'அட்மிட்'
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் வரும் ஏப்., 5ம் தேதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கான செலவை விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய, மூன்று தொகுதிகளின் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தான், ஏற்க வேண்டும் என, அத்தொகுதி பொறுப்பு அமைச்சர் பொன்முடி கூறியதாக தெரிகிறது.
மேலும், பூத் கமிட்டிக்கான செலவையும் எம்.எல்.ஏ.,க்கள் தலையில் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொகுதிக்கு 30 லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டும்.
வானுார் தொகுதியில் தி.மு.க., - எம்.எல்.ஏ., இல்லை என்பதால், தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலர் தான் தேர்தல் செலவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த செலவை எல்லாம் பார்த்து, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாவட்டச் செயலருமான புகழேந்திக்கு காய்ச்சல் வந்து விட்டது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த ஒப்பந்த பணிகள் வாயிலாக, குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகை கைமாறியுள்ளது. அதில் தாராளமாக செலவு செய்யலாம்.
ஆனால், முக்கிய புள்ளிகள் செலவு செய்யாமல் கைவிரித்திருப்பதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து