எம்.எல்.ஏ., - சேர்மன் பனிப்போர் தி.மு.க., உள்குத்து
மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வாக காங்., கட்சி மாவட்டத் தலைவர் ராஜகுமார் பதவி வகித்து வருகிறார். சட்டசபை தேர்தலில் இவரது வெற்றிக்கு பெரிதும் பணியாற்றியவர், மயிலாடுதுறை நகராட்சி சேர்மனும், தி.மு.க., நகர செயலருமான செல்வராஜ்.
தேர்தலுக்குப் பின் இருவருக்கும் இடையே அதிகார போட்டி காரணமாக பனிப் போர் நிலவி வருகிறது. சேர்மனை மதிக்காத எம்.எல்.ஏ.,விற்கு தக்க பாடம் புகட்ட காத்திருந்த சேர்மன் ஆதரவாளர்கள் லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர் சுதாவிற்கு ஓட்டுகள் விழாமல் செய்து தங்களது செல்வாக்கை நிலைநாட்ட உள்குத்து வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை நகரம் தி.மு.க.,வின் கோட்டை என கூறப்படும் நிலையில், காங்., வேட்பாளருக்கு எதிராக, தி.மு.க.,வினர் திரும்பி இருப்பது காங்கிரசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து