விஷ்ணு பிரசாத்திற்கு சீட் கிடைத்தது எப்படி?
ஆரணி தொகுதியில் தொடர்ந்து காங்., கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த முறை தொகுதியை தி.மு.க.,விற்கு பெற வேண்டும் என அமைச்சர்கள் மஸ்தான், வேலு, கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஆரணி தொகுதியில் மீண்டும் விஷ்ணு பிரசாத்திற்கு சீட் கொடுக்க கூடாது என காங்., கட்சியினரே போர்க்கொடி உயர்த்தினர். இதை சரியாக பயன்படுத்தி கொண்ட தி.மு.க., ஆரணியை எடுத்து கொண்டது.
மனம் தளராத விஷ்ணு பிரசாத் உடனடியாக டில்லிக்கு பறந்தார். தலைநகரில் முகாமிட்டு, ராகுலுக்கு நெருக்கமான காங்., மேல்மட்ட தலைவர்களை சந்தித்து, தன் குடும்ப பாரம்பரியத்தை விளக்கி எந்த தொகுதியில் சீட் கொடுத்தாலும் நிற்க தயார் என்று நெகிழ்ச்சியாக கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்ற காங்., தலைமை, கடலுார் தொகுதி வேட்பாளராக அவரை அறிவிக்க கிரீன் சிக்னல் தந்தது. வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன், ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்த விஷ்ணு பிரசாத், நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
வாசகர் கருத்து