ஓ.பி.எஸ் அணிக்கு சீட் மறுப்பா : அண்ணாமலை சொன்னது என்ன?
"தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட உள்ளது. கூட்டணிக் கட்சியினர் 4 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துவிட்டது. 20 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட உள்ளது. மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலுடன் டில்லி செல்ல இருக்கிறோம். வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.
எங்கள் கூட்டணியில் யாருக்கு என்ன வேண்டுமோ அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் தொகுதிப்பங்கீடு நடந்தது. இங்கு மாற்று அரசியல் வரவேண்டும் என்றால் பல கட்சிகள் இருக்க வேண்டும்.
பா.ஜ., அணியில் த.மா.கா.,வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அவரே அறிவிப்பார்.
அனைத்து சமூக தலைவர்களும் இருந்தால் தான், அந்தக் கூட்டணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். திராவிட அரசியலுக்கு மாற்றான அரசியலை பா.ஜ., முன்னெடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாசகர் கருத்து