தமிழகத்தில் சிரமமின்றி தேர்தலை நடத்த முடியும்: சாஹு சொன்ன காரணம்
"ஓட்டுப் பதிவு நடக்கும் நாளில் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார் .
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது, இதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்தலை முடியும்.
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. நாட்டின் தேசிய சராசரியை விட தமிழகத்தில் ஓட்டு போடுபவர்களின் சதவீதம் அதிகமாக இருக்கிறது.
கிராமப்புறத்தில் உள்ள வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இந்த லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க முன் வர வேண்டும். வாக்காளர் அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.
சட்டவிரோதமான நடவடிக்கைகளை தடுக்க தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வாக்குப்பதிவு நடக்கும் நாளில் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் அலுவலர்களுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் கமிஷன் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து