சசிகலா புஷ்பா சர்ச்சை: திருவள்ளூர் பா.ஜ., வேட்பாளர் விளக்கம்
சசிகலா புஷ்பாவிடம் தவறாக நடந்து கொண்டதாக பரப்பப்படும் வீடியோ குறித்து, திருவள்ளூர் பா.ஜ., வேட்பாளர் பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் தனித் தொகுதியின் பா.ஜ., வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் பொன் வி.பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 2022ம் ஆண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா புஷ்பாவிடம் பாலகணபதி தவறாக நடந்து கொண்டதாக ஒரு வீடியோ வெளியானது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாலகணபதி தொடர்புடைய இந்த வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.
இதுகுறித்து, பா.ஜ., வேட்பாளர் பொன்.பாலகணபதி கூறியதாவது:
அன்று மதியம் 1 மணியளவில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அப்போது சகோதரி சசிகலா புஷ்பாவின் சேலை காலில் சிக்கிக் கொண்டது. அடுத்த அடி எடுத்து வைக்கும்போது தேவையற்ற சங்கடம் வரக் கூடாது என்பதால் அதை எடுக்க முடியாத சூழல் எற்பட்டது.
அடுத்து, மலர் வளையம் வைக்கும் எல்லாரும் கையை நீட்டுகிறார்கள். இதை மார்பிங் செய்து, மெதுவாக ஓடவிட்டு சமூக வலைதளங்களில் மோசமாக தி.மு.க.,வினர் சித்தரிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் தவறான நோக்கம் எதுவும் இல்லை. அதை சசிகலா புஷ்பாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ. அவ்வளவு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து