அ.தி.மு.க.,வுக்கு 4 பேர் பிரசாரம்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு; தி.மு.க., வேட்பாளர் மலையரசன்; பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் என, நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த லோக்சபா தொகுதியில், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன் ஆகியோர், கள்ளக்குறிச்சி தெற்கு, வடக்கு மாவட்ட செயலராக உள்ளனர். தவிர, வசந்தம் கார்த்திகேயன் ஆதரவாளராக வேட்பாளர் மலையரசன் உள்ளதால், அவரை அழைத்துக் கொண்டு செல்கிறார். மாவட்ட செயலராக உள்ள இரு தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் களப்பணிகளுக்கு செல்ல முடியவில்லை.
தவிர, 'சிட்டிங்' தி.மு.க., - எம்.பி., கவுதம சிகாமணி, மீண்டும் தன்னை வேட்பாளராக அறிவிக்காத அதிருப்தியில், தேர்தல் அறிவிப்பு முதல் தொகுதி பக்கம் தலைகாட்டாமல் உள்ளார்.
சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கத்துக்கு 'சீட்' கிடைக்காமல், அவரது ஆதரவாளர்கள் பெயரளவில் தேர்தல் பணியில் ஈடுபடுவதால், தி.மு.க., வேட்பாளர் விரக்தியில் உள்ளார்.
அதேபோல், அ.தி.மு.க.,வில் உள்ள ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு சித்ரா, கள்ளக்குறிச்சி செந்தில்குமார் ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நால்வரும், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். தங்களது தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து