வாகனங்களில் போலீஸ் 'லைட்' : தேர்தல் பறக்கும் படை குழப்பம்

தேர்தல் பறக்கும் படையை குழப்பும் வகையில்,அரசியல்வாதிகளின் வாகனங்களில் போலீஸ் பயன்படுத்தும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுஉள்ளன.

போலீஸ் ரோந்து வாகனங்கள் மட்டுமின்றி அதிகாரிகளின் சொகுசு கார்களிலும், மேல் பகுதியில் மட்டுமின்றி இன்ஜின் முகப்பில் சிவப்பு, நீலம், வெள்ளை நிறத்தில் எல்.இ.டி., லைட்கள் ஒளிர விடப்படுகின்றன.

பிரச்னை நடக்கும் இடங்களை போக்குவரத்து பாதிப்பின்றி எளிதாக சென்று சேர்வதற்கு, சைரன் ஒலியுடன் இந்த லைட்களை போலீசார் பயன்படுத்துகின்றனர். துாரத்தில் சிவப்பு, நீலம், வெள்ளை நிற லைட் எரிந்தால், போலீஸ் வாகனம் வருகிறது என்பதை பலரும் புரிந்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், போலீஸ் வாகனங்களில் பயன்படுத்தும் எல்.இ.டி., லைட்களை, அரசியல் கட்சி நிர்வாகிகளும் தங்களது விலை உயர்ந்த வாகனங்களில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

போலீசாரின் ரோந்துக்கும், அதிகாரிகள் பயன்பாட்டிற்கும் அரசு வழங்கியுள்ள விலை உயர்ந்த, 'பொலிரோ, குவாலிஸ்' போன்ற வாகனங்களை போன்று அரசியல் கட்சியினருக்கும் வாகனங்கள் உள்ளன. லோக்சபா தேர்தலை ஒட்டி, அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல இடங்களில், வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மனு தாக்கல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாகனங்களில் பண நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் 50,000 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி எடுத்துச் செல்லும் பணத்தை, தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்நிலையில், போலீஸ் லைட்டுடன் வரும் அரசியல்வாதிகள் வாகனங்களை துாரத்தில் பார்த்து, தேர்தல் பறக்கும் படையினர் ஏமாந்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்