சாக்லேட்டில் வேட்பாளர் படம்: கேரளாவில் நுாதன பிரசாரம்

கேரள மாநிலம் கோழிக்கோடு முக்கம் காரசேரியை சேர்ந்தவர் ஆஜிகா கதீஜா. நான்கு ஆண்டுகளுக்கு முன், ஹோம்மேட் சாக்லேட் கடையை துவங்கினார். தான் தயாரிக்கும் சாக்லேட்டுகளுக்கான கவர்களையும் அவரே தயாரித்தார்.
தேர்தல் பிரசாரம் தீவிரம் ஆகி வரும் நிலையில் இந்த களத்துக்கு தன் சாக்லேட்டை கொண்டு சென்றால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த ஆஷிகா கதீஜா, வடகரை காங்., வேட்பாளர் ஷாபி பறம்பில் என்பரை அணுகினார்.
அவரும் ஆர்டர் கொடுத்ததால், அவரது படம் அச்சிட்ட கவர்களில் சாக்லேட்டுகள் தயாரித்து வழங்கினார். ஓட்டு சேகரிக்க செல்லும் வழிகளில் குழந்தைகளுக்கு இந்த சாக்லேட்டுகளை வழங்கினார். இதை பார்த்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சைலஜாவும் சாக்லேட் ஆர்டர் செய்து வாங்கினார்.
இதுபோல கேரளா, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வேட்பாளர்கள் சாக்லேட்டுகளை ஆர்டர் செய்ததால், ஆஷிகா கதீஜாவின் சாக்லேட் நிறுவனம் இரவு, பகலாக செயல்படுகிறது.
வாசகர் கருத்து