ஈரோடு மேற்கு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம், மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த, 25 வரை தேர்தல் பணி செய்வோருக்கு, தொகுதியில் பல இடங்களாக பிரித்து, இட்லி, வடை, சட்னி, சாம்பார், பொங்கல், சட்னி, சாம்பார், மதியம் தக்காளி சாதம், தயிர் சாதம், இரவில் புரோட்டா, இட்லி, தோசை மற்றும், 300 ரூபாய் என, கொடுத்தார்.அதன்பின் இன்று வரை, மூன்று நேரமும், 'கவிச்சு' கிரேவி, தொக்கு, பிரியாணி, 500 ரூபாய் என, உயர்த்தி விட்டார்.
பகுதி செயலர்கள், வேண்டியவர்களிடமும், 'ஏதாவது கொடுப்பா' என, சாப்பாட்டுடன் ஸ்வீட், போண்டா, பிற வெரைட்டி என, மூன்று நேரமும் கலக்குகிறாராம்.வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, மஞ்சள் சட்டை, துண்டு என, ஒவ்வொரு நாளும் உடன் வருவோருக்கு பரிசு வேறு. இதனால், உற்சாகம் கூடியதுடன், பக்கத்து தொகுதியில் பணி செய்வோரும், உணவு நேரத்துக்கு இந்த கூடாரத்துக்கு வருவதை பார்த்து ரசித்தாராம் ராமலிங்கம்.கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காக கொடுத்தான்...
வாசகர் கருத்து