அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட 'மாஜி' திட்டம்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போது தி.மு.க.,வில் இருப்பவருமான தோப்பு வெங்கடாசலத்தை, கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் அழைத்து, 'பணி செய்யும்படி' யோசனை கூறியதால், முழு வீச்சில் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக பணி செய்கிறார்.
இதுபற்றி, அவரது விசுவாசிகள் கூறியதாவது:
கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக, திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனுடனும், தி.மு.க.,வினருடனும் கிராமம் கிராமமாக தோப்பு வெங்கடாசலம் ஓட்டு சேகரித்து வருகிறார்.
கடந்த, 2016, 2021ல் தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., ஒரே மாதிரியான ஓட்டையே பெற்றுள்ளதால், இம்முறை தி.மு.க., வழக்கத்தைவிட அதிகமாக பெற்று, அ.தி.மு.க., குறைந்தால் தன் உழைப்புதான் காரணம் என கூறிக் கொள்ள தோப்பு திட்டமிடுகிறார். அத்துடன் அ.தி.மு.க.,வில் கடந்த, 2021ல் தனக்கு சீட்டு தராததற்கும், கட்சியில் இருந்து வெளியேற காரணமான செங்கோட்டையன், கருப்பணன், மற்றும் பழனிசாமிக்கும் பாடம் புகட்ட வேண்டும் என, ஓடுகிறார்.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து