2024 லோக்சபா தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பின் முழு விபரம்..

நாடு முழுவதும் 18வது லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. புதுடில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து உள்ளிட்டோர், தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அறிவிப்பில் உள்ள முழு விபரங்கள் பின்வருமாறு:

4 மாநில தேர்தல் நிலவரம்



லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் சட்டசபைகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

ஒடிஷாவில் நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

முதல்கட்டம்



நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல்கட்ட தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாக மார்ச் 27ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு பரிசீலனை ஏப்.,28ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அந்தவகையில், தமிழகத்தில் மட்டும் வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் 45 நாள்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே, அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, டில்லி, கோவா, குஜராத், ஹிமாச்சல், ஹரியாணா, கேரளா, மிசோரம், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட், அந்தமான் நிகோபர், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள், புதுச்சேரி, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உட்பட 22 மாநிலங்கள் என 102 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

இரண்டாம் கட்டம்



ஏப்ரல் 22ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதேநாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.

மூன்றாம் கட்டம்



மூன்றாம்கட்டமாக, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.

நான்காம் கட்டம்



ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 லோக்சபா தொகுதிகளுக்கு மே 13ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஐந்தாம் கட்டம்



மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு ஏப்.,20ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

ஆறாம் கட்டம்



மே 25ம் தேதி 57 லோக்சபா தொகுதிகளுக்கு ஆறாம்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஏழாம்கட்டம்



ஜூன் 1ம் தேதி 57 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி முதல் எண்ணப்பட உள்ளன. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளன. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்