பா.ஜ.,வில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்,பி.,க்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் அர்ஜூன் சிங் மற்றும் திப்யேந்து அதிகாரி பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை,தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.பி.,க்கள் இருவர் அக் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் பராக்பூர் தொகுதி எம்.பி., அர்ஜூன் சிங், தாம்லுக் தொகுதி எம்.பி., திப்யேந்து அதிகாரி ஆகியோருக்கு லோக்சபா தேர்தலில் அக்கட்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருவரும் பா.ஜ.,வில் (15.03) இன்று இணைந்தனர்.
வாசகர் கருத்து