'சொகுசு' வீடு தேடும் தி.மு.க. , - எம்.பி.,-
கள்ளக்குறிச்சியின் சிட்டிங் எம்.பி., - தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி. இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 10 பேர், அவரது பெயரில் விருப்ப மனு அளித்துள்ளனர்.
கடந்த 10ல், நேர்காணலுக்கு சென்று வந்த எம்.பி., கவுதம சிகாமணி, 'கட்சி மேலிடம் எனக்கு சீட் உறுதி செய்து விட்டது. தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில், ஆத்துார் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில், 'சொகுசு' வீடு தேர்வு செய்யுங்கள்' என, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எம்.பி., தங்கி பிரசாரம் செய்யும் வகையில், ஆத்துார், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள், அனைத்து வசதிகளுடன் கொண்ட 'சொகுசு' வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து