எம்.பி., சுப்பராயனுக்கு சொந்த கட்சியே எதிர்ப்பு
தி.மு.க., கூட்டணியில் திருப்பூர் லோக்சபா தொகுதி, இந்த முறையும் இந்திய கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், சுப்பராயன் (இந்திய கம்யூ.,) தி.மு.க., கூட்டணியில் களமிறங்கி, வெற்றி பெற்றார். இ.கம்யூ., கட்சி விதிகளின்படி, 70 வயதை கடந்தவர்கள், தேர்தலில் போட்டியிடுவதில்லை. மூன்று முறைக்கு மேல் ஒருவர் தேர்தலில் போட்டியிட, கட்சி வாய்ப்பு வழங்குவதில்லை.
இருப்பினும், விதி முறையை மீறி, மீண்டும் சுப்பராயனே வேட்பாளராக களமிறங்க சதி நடந்து வருவதாக, அக்கட்சியில் அதிருப்தியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்திய கம்யூ., கட்சியினர் சிலர் கூறுகையில், 'கட்சி விதிமுறைகளை பின்பற்றுவதில், மா.கம்யூ., மட்டுமே சரிவர இயங்குகிறது. இ.கம்யூ., விதிமுறைகளை மீறி, திருப்பூர் தொகுதிக்கான வேட்பாளராக மீண்டும் தேர்வு செய்ய இருக்கிறது. தமிழக முதல்வரின் விருப்பம் என்று கூறியும், தேர்தல் ஏற்பாடுகளை துவங்கியுள்ளனர். அரசியல் சூழல், கூட்டணி எப்படியிருந்தாலும், வேட்பாளர் தேர்வில் கட்சி கட்டுப்பாடுடன் இயங்கவேண்டும்' என்றனர்.
வாசகர் கருத்து