காங்கிரசில் இணைந்த அடுத்த பா.ஜ., எம்.பி.,

பா.ஜ., சார்பில் ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதியின் பா.ஜ., எம்.பி., ராகுல் கஸ்வான் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பா.ஜ., சார்பில் கடந்த இரண்டு முறை சுரு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனவர், ராகுல் கஸ்வான். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் இவருக்கு பா.ஜ., மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலலையில் காங்கிரசில் இன்று இணைந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் கஸ்வான் கூறுகையில், 'கடந்த 10 வருடங்களாக மக்கள் பணியில் சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி., நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது நன்றிகள். நாட்டில் நிலவும் அரசியில் பிரச்சனைகளால், பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஹரியானாவை சேர்ந்த பா.ஜ., எம்.பி., பிரிஜேந்திர சிங், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இன்று, மற்றொரு பா.ஜ., எம்.பி., காங்கிரஸில் இணைந்தது, அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது
வாசகர் கருத்து