''பொது இடங்களில் கவனமுடன் பேசவும்'': ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

பொது இடங்களில் பேசும்போது அநாகரிகமான சொற்களை பயன்படுத்த கூடாது, கவனமுடன் பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
கடந்தாண்டு நவம்பரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை 'பிக்பாக்கெட்' எனக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதனை எதிர்த்து டிசம்பரில் ராகுலுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்தியது. அதன்படி, பொது இடங்களில் பேசும்போது அநாகரிகமான சொற்களை பயன்படுத்த கூடாது. அதிக கவனத்துடன் பேச வேண்டும் என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது
வாசகர் கருத்து