பம்பரம் சின்னம்: 2 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவு
லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய ம.தி.மு.க.,வின் விண்ணப்பம் மீது தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., போட்டியிடுகிறது. இதையொட்டி, தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க., மனு கொடுத்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க., வழக்கு தொடர்ந்தது.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், 'ம.தி.மு.க., தரப்பில் பிப்ரவரி 28ல் அளித்த புதிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்கப்படும்' எனத் தெரிவித்தது.
இதையடுத்து, ம.தி.மு.க.,வின் விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டுமெனதேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து