பாய்ச்சலுக்கு' தயாராகும் அழகிரி ஆதரவாளர்கள்
தி.மு.க., என்றாலே ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் என அமைச்சர்கள் முதல் வட்டச் செயலர் வரை 'கோஷ்டி'களாக பிரிந்து கிடந்த காலம் அது. சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தி.மு.க.,வின் வெற்றிக்கு அழகிரியின் படைபலம் பக்கபலமாக இருந்தது.
ஆனால், ஸ்டாலின் வளர்ச்சி கட்சிக்குள் அதிகரித்தது. கட்சி விதியை மீறினார் என்ற காரணத்தால் 2014ல் அழகிரி கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். முக்கிய நிர்வாகிகளும் அழகிரிக்கு ஆதரவாக வெளியேறினர். அதன் பின் பல நிர்வாகிகள் ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறினர்.
கருணாநிதி மறைவுக்குப் பின், உதயநிதி முயற்சியில் ஸ்டாலின், அழகிரி இடையேசமாதானம் ஏற்பட்டது.
அதேநேரம், அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க., பாசத்தில் உள்ளனர். வரும் லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க.,விற்காக உழைக்கத் தயாராக இருக்கின்றனர். அதற்கு, ஸ்டாலின் இசைவு தெரிவிக்க வேண்டும் என்பதால், அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாசகர் கருத்து