தி.மு.க., ஏன் 40 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: சீமான் கேள்வி

'உயர்நீதிமன்றத்தில் தமிழ்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வருவதை, ஏற்று செயல்படுத்த வேண்டியது, அதிகாரத்தில் இருப்பவர்கள் தான். தி.மு.க., பல முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது, அக்கட்சி, இரண்டு ஜனாதிபதிகளை தேர்வு செய்துள்ளது.
அவர்கள் கையெழுத்து போட்டிருந்தால் இந்த திட்டம் இயற்றப்பட்டு என்றோ நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும். எந்த கோரிக்கையும் மாநில அரசால் நிறைவேற்ற முடியாத பட்சத்தில் எதற்கு 40 தொகுதியில் போட்டியிட வேண்டும்?
18 வருடங்கள் மத்திய ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த கட்சியால் இதை கூட செயல்படுத்த முடியவில்லை. ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த போது இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தால், அவர் கையெழுத்திட்டிருப்பார்.
புதிதாக கட்டிய நாடாளுமன்றத்தில் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகள் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் மொழி ஏன் இடம் பெறவில்லை. இந்த கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து