ராமதாசை சந்திக்க பா.ம.க., திடீர் தடை

'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னை வருகிறார்; அவரை பார்க்க யாரும் வர வேண்டாம்' என, அக்கட்சி கூறியுள்ளது.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்ட இல்லத்தில் வசிக்கும் ராமதாசை, தினந்தோறும் பா.ம.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்தித்து வருகின்றனர். அதற்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை போடப்பட்டுள்ளது.

கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் பேச்சு நடத்தி வரும் பா.ம.க., தரப்பில், எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இன்று சென்னை வரும் ராமதாஸ், கூட்டணி தொடர்பாக பலரை ரகசியமாக சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, சென்னையிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பை தவிர்க்க விரும்புகிறார். அதனால், சென்னையிலும் அவரை சந்திக்க கட்சியினர் யாரும் வர வேண்டாம் என, பா.ம.க., தலைமை தெரிவித்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்