ஆளுங்கட்சி தோற்கும் 'மாஜி' எம்.எல்.ஏ., சாபம்

அ.தி.மு.க.,வில், ஆரம்ப காலத்தில் இருந்து, பல பொறுப்புகளை வகித்தவர் நீலகண்டன். திரு.வி.க.,நகர் முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவருக்கு, இம்முறை வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ளார்.

நீலகண்டன் கூறியதாவது: ஆரம்ப காலத்திலேயே, சேவல் சின்னத்தில், எழும்பூர் தொகுதியில் தேர்தலை சந்தித்துள்ளேன். இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், வடசென்னை தொகுதிகளில், மாவட்ட செயலர்களான, அமைச்சர் ஜெயகுமார், பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகியோரால், கட்சி சீரழிந்து வருகிறது. இவர்களால், அ.தி.மு.க., நிச்சயம் படுதோல்வி அடையும். தினகரனை நான் சந்தித்தது உண்மை; ஆனால், அ.ம.மு.க.,வில் சேரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)