ஹிமாச்சல் விவகாரம்: நீதிமன்றத்தை நாடும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.,க்கள்
ஹிமாச்சலில் சஸ்பெண்ட செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்கள் உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிமாச்சலில் கடந்த 27ம் தேதி நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இது, காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது. இக் கோரிக்கை வலுப்பெற்றதையடுத்து, 15 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். அதன் பின், குலுக்கல் முறையில் பா.ஜ., வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எ.ல்.ஏ.,கள் ராஜீந்தர் ராணா, சுதீர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் புட்டோ, ரவி தாக்குர், சைதன்யா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.
பட்ஜெட் வாக்கெடுப்பில் கொறடா உத்தரவைப் பின்பற்றாமல் 6 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா நேற்று சஸ்பெண்ட் செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக பா.ஜ., உறுப்பினர்கள் 15 பேரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சஸ்பெண்ட செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சஸ்பெண்ட செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்களும் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து