காங்கிரஸ் - ஆம் ஆத்மி: 5 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு நிறைவு
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா மற்றும் சண்டிகர் ஆகியவற்றிலும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலில் தொகுதி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் வேலையில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் டெல்லியில் நான்கில் ஆம் ஆத்மியும் மூன்றில் காங்கிரசும் போட்டியிட உள்ளன. இதில், தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் புதுடெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி களமிறங்க உள்ளது.
சாந்தினி சவுக், வடமேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்க உள்ளது. அதேபோல், குஜராத்தில் பாவ் நகர், பரூச் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. ஹரியானாவாவில் குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அதேநேரம், கோவாவில் ஏற்கெனவே வேட்பாளரை ஆம் ஆத்மி அறிவித்துவிட்ட நிலையில், அந்த வேட்பாளர் திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கோவா மற்றும் சண்டிகரில் ஒரு லோக்சபா தொகுதி, காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளதை முதல்கட்ட வெற்றியாக காங்கிரஸ் பார்க்கப்படுகிறது. மேற்குவங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உடன்பாடு ஏற்படும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
காங்கிரசின் நம்பிக்கையை மம்தா நிறைவேற்றுவாரா என்பதற்கான விடை, விரைவில் தெரியவரும்.
வாசகர் கருத்து