'பம்பரம்' சின்னத்துக்கு சிக்கல் : நீதிமன்றம் சென்ற வைகோ
லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பம்பரம் பொது சின்னம் இல்லை என்பதால், வேறு எந்த கட்சியும் அதை கோரவில்லை. லோக்சபா தேர்தல் அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால், ம.தி.மு.க., சார்பில் அளித்த மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் வேண்டும் என, நேற்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில், வைகோ சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி முறையீடு செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.
வாசகர் கருத்து